Date:

வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை: முகநூல் நேரலைக்கும் தடை

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அருச்சுனாவை,  சாவகச்சேரி நீதவான் நீதிமன்று 75 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணை மற்றும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுத்துள்ளது.

சாவகச்சேரி  வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவற்றின் மீதான விசாரணைகள் செவ்வாய்க்கிழமை (16) மன்றில் நடைபெற்றது. பிரதிவாதியான வைத்தியர் மன்றில் முன்னிலையாகி இருந்தார்

வழக்கு விசாரணைகளை அடுத்து, வைத்தியரை 75ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்த நீதிமன்றம் , வைத்தியசாலைக்கு செல்லவோ , நீதிமன்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் முகநூல் நேரலையிலையோ ,பதிவுகள் ஊடாக கருத்து தெரிவிக்கவோ கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

அதேவேளை, குற்றம் சாட்டிய மற்றைய வைத்தியர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலங்களை வழங்குமாறும் வைத்தியர் அருச்சுனாவுக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.

அத்துடன், பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் அளிக்க தவறினாலோ , அல்லது ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறினாலோ அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...

மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிரான மேல்முறையீடு நிராகரிப்பு

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் (Najib Razak) சாதகமாக உச்சநீதிமன்றம்...