Date:

குறைந்தது மின் கட்டணம்

நாளை முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 22.5 சதவீதத்தினால் குறைப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது.

இதற்கமைய, 0 முதல் 30 வரையான மின் அலகு ஒன்றின் கட்டணம் 2 ரூபாவினாலும், 30 முதல் 60 வரையான அலகு ஒன்றின் கட்டணம் 11 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

60 முதல் 90 வரையான அலகு ஒன்றின் கட்டணம் 12 ரூபாவினாலும், 90 முதல் 120 வரையிலான அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, வீட்டுப் பாவனை மின் கட்டணம் 27 சதவீதத்தினாலும், மத ஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 30 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் கைத்தொழிற்துறைக்கான கட்டணம் 25 சதவீதத்தினாலும் குறைவடைகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...