தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலம் தொடர்பில் அரசியலமைப்புக்கு அமைய உயர்நீதிமன்றம் தெளிவூட்ட வேண்டும் என கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகரான C.D.லெவனவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவூட்டும் வரை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு இடைகால தடை விதிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.