Date:

சிறைக்கு செல்லும் ஹிருணிகா அடுத்து ​செய்யவுள்ள திட்டம்?

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (28) மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் கைவிரல் அடையாளங்கள் எடுக்கப்பட்டதை அடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளினால் அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஹிருணிகா பிரேமசந்திரவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது.

தெமட்டகொடை பகுதியில் இளைஞன் ஒருவனை, டிஃபென்டர் மூலம் கடத்திச் சென்ற வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...