Date:

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.

அதன்படி www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கடைசித் திகதி நீடிக்கப்பட மாட்டாது, எனவே குறித்த திகதிக்கு முன்னதாகவே பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அதிபர் மூலமாகவோ, தனியார் விண்ணப்பதாரர்கள் மூலமாகவோ அனுப்ப முடியும்.

இதேவேளை தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் அதன் அச்சிடப்பட்ட பிரதியை தங்கள் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இது தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் 1911 அல்லது 0112784208 அல்லது 0112784537 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு வினவ முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...