கனேடிய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தக பிரதானி டேனியல் பூட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், மெட்றோபொலிடன் கல்லூரியின் தவிசாளருடமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் இடையிலால சந்திப்பொன்று கொழும்பிலுள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலில் புதன்கிழமை (19) இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் சமகால அரசியல் , பொருளாதார நிலைப்பாடுகள் மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான உயர்கல்வித்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.