Date:

ஜனாதிபதியின் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்படும் சாத்தியம்!

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  ஒரு வருடத்துக்கு  நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில்  விவாதிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தற்போது ஜனாதிபதிக்கு விசுவாசமான தரப்பினர் சட்டத்துறை நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 வருடத்திலிருந்து 6 வருடங்களாக இந்த வகையில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைத்தது போன்று 2/3 பெரும்பான்மையுடன் 5 வருடங்களிலிருந்து 6 வருடங்களாக பதவிக் காலத்தை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...