Date:

யாழ். ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் சொத்துக்களுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள ஊடகவியலாளர் தமபித்துரை பிரதீபனின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியதுடன், உடைமைகளுக்கு தீ வைத்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று (13) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேரை கொண்ட வன்முறைக் குழு, இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன், தீ வைத்து கொளுத்தப்பட்டது.

“திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டுள்ளது.

 

 

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...