2026 பிரபஞ்ச அழகி மகுடத்தை சூடினார் ஜெனிபர் பாரெட்டோ

75-ஆவது சர்வதேசப் பிரபஞ்ச அழகிப் போட்டியில், மெக்சிகோவின் பாத்திமா போஷைத் தொடர்ந்து, புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ 2026-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக (Miss Universe 2026) மகுடம் சூடியுள்ளார்.

 

 

 

116 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்பட்டத்திற்காகப் போட்டியிட்ட நிலையில், புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரில் நேற்று ( 24) நடைபெற்ற இறுதிச் சுற்றில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

 

 

 

போட்டியின் பல்வேறு சுற்றுகளைக் கடந்து ஜெனிபர் பாரெட்டோ வெற்றி வாகை சூடினார்.

 

 

 

புதிதாக மகுடம் சூடிய பிரபஞ்ச அழகிக்கு, வெனிசுலா நகை வடிவமைப்பாளர் ஜோர்ஜ் விட்டெல்ஸால் வடிவமைக்கப்பட்ட, 3,150 வைரங்களைக் கொண்ட “நித்திய மரபின் ஒளி” (The Radiance of Eternal Legacy) என்ற மகுடம் அணிவிக்கப்பட்டது.

 

 

 

இதேவேளை, 48-ஆவது இலங்கைப் பிரபஞ்ச அழகியான நிம்ஹாரா சசிந்தி, 2026-ஆம் ஆண்டிற்கான சர்வதேசப் பிரபஞ்ச அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நியூயோர்க் செனட் சபையில் கால்பதிக்கும் முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை 34...

ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாக அமெரிக்க ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது – ஈரான்...

ஹோர்முஸ் நீரிணைக்கு மேலாகப் பறந்த அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் வான்...