2,000 மெற்றிக் தொன் சோளம் பல மாதங்களாகத் துறைமுகத்தில் தேக்கம்!

திரிபோஷ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெற்றிக் தொன் மக்காச்சோளம், தேவையான அனுமதிகள் கிடைக்காததால் கொழும்பு துறைமுகத்தில் நீண்டகாலமாகத் தேங்கியுள்ளதாக பாராளுமன்ற கோப் குழு முன்னிலையில் தெரியவந்துள்ளது.

 

கடந்த ஜனவரி மாதம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட குறித்த மக்காச்சோளத் தொகுதியை விடுவிப்பதற்குத் தேவையான வசதிகளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் வழங்காததே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

 

மக்காச்சோள இருப்பை விடுவிக்க முடியாத காரணத்தால், கடந்த காலத்தில் திரிபோஷா நிறுவனம் இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருந்ததாகவும், விவசாய அமைச்சின் அனுமதிகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதங்களும் உற்பத்தி பாதிப்புக்கு காரணமாக அமைந்ததாகவும் கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திரிபோஷா நிறுவனம் ஒரு நாள் மூடப்பட்டால் சுமார் 1.2 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாகவும் அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவுக்கு மாதாந்தம் 18 இலட்சம் 750 கிராம் பொட்டலங்கள் தேவைப்படுகின்றன. இதன் உற்பத்திக்கு 1,337 மெற்றிக் தொன் மக்காச்சோளம் மற்றும் அரிசி தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் தற்போது மொத்தத் தேவையில் 49.5 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் கடந்த செப்டெம்பர் மாதம் 5 இலட்சத்து 36 ஆயிரம் திரிபோஷா பொட்டலங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

 

மேலும், நீண்டகாலமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள மக்காச்சோளத்தின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதால், விடுவிக்கப்பட்ட பின்னர் அதன் தரத்தை மீண்டும் பரிசோதிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

குறித்த மக்காச்சோளம் 2024ஆம் ஆண்டு அமைச்சரவை அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், தற்போது அதனை திரிபோஷா உற்பத்திக்காகப் பயன்படுத்துவதற்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொலொன்ன பிரதேச சபை பட்ஜெட்டில் NPP படுதோல்வி

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலுள்ள கொலொன்ன பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.       2027...

பலத்த மழையின் போது மலையகத்தில் நில அதிர்வு ஏற்படும் அபாயம்!

அதிக மழைவீழ்ச்சி நிலவும் காலப்பகுதியில் நாட்டின் மத்திய மலைநாட்டில் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்...