இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (24) மாலை 5.41 மணிக்கு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

இதற்கமைய, சுனாமி அபாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் குறித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

 

மேலும், தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

சுனாமி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

இது தொடர்பில் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கண்டி, கேகாலைக்கு மண்சரிவு எச்சரிக்கை!

கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.       தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி மாவட்டத்தின்...

இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் (Mauritius / Reunion) பிராந்தியத்தில் இன்று (24) பிற்பகல் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...