கண்டி, கேகாலைக்கு மண்சரிவு எச்சரிக்கை!

கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் கேகாலை மாவட்டத்தின் புலத்கோஹுபிட்டிய, கேகாலை, கலிகமுவ, யட்டியந்தோட்டை, மாவனெல்லை, ரம்புக்கனை உள்ளிட்ட பகுதிகளுக்கு அம்பர் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

இந்த எச்சரிக்கை இன்று (24) மாலை 4 மணி முதல் நாளை (25) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும்.

 

 

 

குறித்த பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதால், தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் மண்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

 

மேலும், கண்டி மாவட்டத்தின் யதிநுவர மற்றும் கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல்ல, அரநாயக்க உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவுக்கான முன் அறிகுறிகளை அவதானிக்குமாறும், ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

இந்து சமுத்திரத்தின் மொரிஷியஸ் மற்றும் ரீயூனியன் (Mauritius / Reunion) பிராந்தியத்தில் இன்று (24) பிற்பகல் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

இலங்கைக்கு சுனாமி அபாயம் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.       இது தொடர்பான...