Date:

துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது- இலங்கை ஈரான் தூதரகத்தில் கலாநிதி இல்ஹாம் மரைக்காரின் குறிப்பு

துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது.இலங்கை ஈரான் தூதரகத்தின் பதிவு புத்தகத்தில் கலாநிதி இல்ஹாம் மரைக்காரின் குறிப்பில் பதிவிட்டுள்ளார்.


கடந்த 19 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி கலாநிதி.இப்றாஹிம் ரைசி ஹெலிகப்டர் விபத்தில் மரணமானதையடுத்து இலங்கையில் அமைந்துள்ள ஈரான் துாதுவரலாயத்திற்கு அரசியல்,மத,சமூக துறைசார் முக்கிய பிரதி நிதிகள் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப ஏட்டில் தமது கவலையினை ஈரான் அரசுக்கும்,நாட்டு மக்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கொழும்பு 7 இல் அமைந்துள் ஈரான் துாதுவராலயத்துக்கு சென்ற அமேசன் கல்வி நிலையத்தின் ( Amazon College and Amazon Compus) நிறைவேற்று பணிப்பாளரும்,சமூக சேவையாளருமான கலாநிதி இல்ஹாம் மரைக்கார் அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கள் பதிவேட்டில் மர்ஹூம் இப்றாஹிம் ரைசியின் துணிச்சலான தீர்மானங்ள் தொடர்பில் தமது பதிவினை இட்டதுடன்,அவரது சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதுடன்,ஈரானின் பதில் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள கலாநிதி மொஹம்மட் மெதக்பர் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்,ஈரான் நாட்டு மக்களும் அரசாங்கமும் தற்போது எதிர் கொண்டுள்ள கவலையான தருணத்தில் இலங்கையர்களும் இணைந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதன் போது இலங்கைக்கான ஈரான் நாட்டின் துாதுவர் டாக்டர்.அலி ரீசா டெல்கோஷ் ( Dr.Alireza Delkhosh) அவர்களை சந்தித்து தமது கவலையினை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying...

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...