திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ரொட்டவெவ பகுதியிலுள்ள மசூட் அஸ்மட், 15 வயது மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் அரபு மத்ரசாவில் இருந்து (10) திகதி வௌ்ளிக்கிழமை ரொட்டவெவ கிராமத்துக்கு வருகை தந்திருந்திருந்தாரல் இந்த நிலையில் 16 திகதி வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாகவும் (18) திகதி சனிக்கிழமை மாணவனின் தந்தை மொறவெவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.