கொழும்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய 22 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவிக்கின்றது.
வடிகாண் கட்டமைப்பு முடங்கியுள்ளமை இதற்கான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர், பொறியியலாளர் R.A.T.B.ரணவக்க தெரிவித்துள்ளார்.
வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான மார்க்கங்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.