Date:

இன்றும் கடும் மழை -அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும்  கடும் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக  வளிகண்டலவியல் திணைகளம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடூம் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஷ வாயுவை சுவாசித்த 13 மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை

மொரட்டுவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் இரசாயனம் கலந்த காற்றை சுவாசித்ததில்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட...

ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு உத்தரவு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கில் தொடர்புடைய குறுந்தகட்டை...