சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவியுள்ளது.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் புகையை வெளியேற்றும் எரிவாயு குழாய் மீதே மின்னல் தாக்கியுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பரவிய தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மின்னல் தாக்கம் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.