Date:

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து ஜனாதிபதி அதிரடி

2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு அரச உத்தியோகத்தர்களின் சம்பளத் திருத்தம் குறித்துத் தீர்மானிக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,

2024 ஜனவரி மாதம் முதல் அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் 5,000/- ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட்டது.

 

தற்போது 10,000/- ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 2,500/- ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகின்ற போது, இது போதுமானதாக இல்லை. இருந்த போதிலும் அரசினால் இயன்ற அளவில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் இனி அடுத்த வருடமே கவனத்திற் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...