Date:

ஆர்.சி.பி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு

இந்திய இருபது20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அறிவித்த விராட் கோலி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணயிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய இருபது20 அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன்.

இதில், 5-6 ஆண்டுகள் அணித் தலைவராக இருந்துள்ளேன். தற்போது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க தயாராவதற்கு இடம் தேவை என கருதுகிறேன்.

T20 அணியின் தலைவராக இருந்தபோது அணிக்காக என்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கியுள்ளேன். தீவிர ஆலோசனைக்கு பின்னர், T20 அணி தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

துபாயில் நடைபெறவுள்ள T20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் பதவி விலகவுள்ளேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி, டெஸ்ட் அணி, T20 என அனைத்து அணியின் தலைவராக விராட் கோலி இருந்து வந்தார்.

இதேவேளை ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைவராகவும் விராட் கோலி இருந்து வருகிறார்.

இருப்பினும், கோலி தலைமையில் பெங்களூரூ அணி இதுவரையில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை.

இதற்கிடையில், விராட்கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியாக சோபிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், T20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக விராட் கோலி நேற்று அறிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பில் போராட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல்...

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

பாரம்பரியம் மிளிர அரங்கேறிய லயன்ஸ் மாவட்ட 306 D3-இன் “தைப்பொங்கல் விழா 2026”

லயன்ஸ் சர்வதேச மாவட்ட 306 D3 இன் ஏற்பாட்டில், தமிழர்களின் பாரம்பரிய...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200...