யுக்ரேன் – ரஷ்யா யுத்தத்திற்காக ரஷ்யா இராணுவத்தில் ஆட்கடத்தல் ஊடாக இணைத்துக் கொள்ளப்பட்ட இலங்கையர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை நடாத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
இந்த சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை அறிந்துகொள்ளும் வகையிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.