Date:

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல்

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக தனிநபர் ஒருவருக்கும் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் இராணுவத் தளபதியினால் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 07) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த துஷார சாலிய ரணவக்க மற்றும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான கூகுள் மற்றும் அதன் நிகழ்நிலை காணொளி பகிர்வு தளமான யூடியூப் ஆகியோர் இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தனது வழக்கைத் தாக்கல் செய்த இராணுவத் தளபதி, பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்புமாறும், அவதூறான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மேலும் பரப்பப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதற்காக ரூ.25 மில்லியனுக்கும் அதிகமான அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தயார்! அஜித் பெரேரா அறிவிப்பு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைபு மசோதா தயார்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலமானார் என்ற செய்தி தொடர்பான விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள்...

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...