இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை சிபேட்கோ குறைக்கின்றது.
ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 368 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 30 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 333 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 9 ரூபாவால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 377 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 215 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது