பம்பலப்பிட்டி தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பெர்னாண்டோ செவ்வாய்க்கிழமை (14) இரவு பம்பலப்பிட்டியில் உள்ள கொத்தலாவல அவென்யூவில் உள்ள ஒரு நிலத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு அவர் அந்த இடத்தில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளை தாக்கியதாகக் கூறப்படுகிறது.