Date:

நாட்டை உலுக்கிய விபத்து – இருவர் அதிரடி கைது

தியத்தலாவ கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் இருவர் சந்தேகத்தின் பேரில் இன்று (22) கைது செய்யப்பட்டதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

Foxhill supercross மோட்டார் பந்தயத்தில் பந்தய இலக்கம் 5 இல் கலந்து கொண்ட மாத்தறை மெதபாறை ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரும்,

பந்தய இலக்கம் 196 இல் போட்டியிட்ட பேராதனை மகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் விபத்தில் காயமடைந்த நிலையில் தற்போது தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று (21) இந்த போட்டி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்தயத்தின் போது ஒரு கார் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது, இதையடுத்து அதை பார்க்கச் சென்ற ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட...

Breaking கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்...

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...