ஈரானின் ஸ்ஃபாஹான் நகரில் வெடிப்பு சத்தங்கள் கேட்பதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஈரான் நகரை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலினால் இந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அணு நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை இலக்கு வைத்தே இந்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.