Date:

இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அனில் கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளேவை நியமிப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பதவிக்கு அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக வி.வி.எஸ். லகஸ்மனின் பெயரும் ஆலோசிக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவி வகிக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், அனில் கும்ப்ளேவை மீண்டும் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பதவி வகித்த அனில் கும்ப்ளே, பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

அணித் தலைவர் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அனில் கும்ப்ளே பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகின.

முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஸ்மன் ஆகியோர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினால், அப்போதைய சந்தர்ப்பத்தில் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக சவுரவ் கங்குலி பதவி வகிப்பதால், மீண்டும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அனில் கும்ப்ளேவை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...