இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை மதுபோதையுடன் சிறைச்சாலைக்குள் முறையற்ற வகையில் செயற்பட்டதாகவும், சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாகவும் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை சிறைக்கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்பட்டுள்ள விடயம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்தார்.