அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

 

அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தீர்மானித்துள்னர்.

 

அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 நிறைவேற்றுத் தரங்களைப் புறக்கணித்து, 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக இந்நாட்டின் நிறைவேற்றுச் சேவைகளில் தெரிவு செய்யப்பட்ட சில துறைகளுக்கு மாத்திரம் அரசாங்கம் கொடுப்பனவுகளை அதிகரித்துள்ளமையே இதற்கு உண்மையான காரணமாகும்.

 

இதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 23 ஆம் திகதி ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதிபர் தர அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA)...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக...