Date:

கடூழிய தண்டனை விதிக்கப்பட்ட தேரர்: கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஞானசார தேரருக்கு தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில் பிரதிவாதி ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அதனை தொடர்நது, தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...

செவ்வந்தியின் தாய் மரணம்

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக...

கெஹலியவுக்கு எதிரான ஆவணங்களை அச்சிட ரூ.1.5 மில்லியன் செலவு

போலி இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு...

ட்ரம்பின் தீர்வை வரி: சஜித் அதிரடி அறிவிப்பு

எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக...