Date:

மரத்தில் ஏறிய தங்க வளையல்

வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

பதுளை, மெதபத்தனை பகுதியில்  வீடொன்றில் யாரும் இல்லாதபோது ஜன்னலை உடைத்து உள் புகுந்து  தங்க வளையல் ஒன்றையும்,  37,000 ரூபாய்  பணத்தையும் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலொன்றிக்கமைய  விசாரணைகளை மேற்கொண்ட  பொலிஸார்  22 வயதுடைய  இளைஞன்  ஒருவரை  கைது  செய்துள்ளனர் .

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்  போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும் தங்க வளையலை , தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும்  பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளார் .

மேலும்,  இச்சம்பவம்  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டு வருவதாக  தெரிவித்துள்ளனர் .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...