Date:

இலங்கையர் பலர் டுபாய் பொலிஸாரால் கைது

பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்த சிலர் டுபாயில் அந்நாட்டு பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஊரகஹா மைக்கல், புஸ்ஸே ஹர்ஷ மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்நாட்டில் உள்ள ஒரு இரவு விடுதியில் நடந்த மோதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது,13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐந்து பேரின் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உதவியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கொஸ்கொட சுஜீ குறித்த குழுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

எனினும், இந்த கைது தொடர்பாக டுபாய் இராச்சியம் இதுவரை அதிகாரபூர்வமாக இலங்கை அரசுக்கு அறிவிக்கவில்லை.

சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...