இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தடுமாற்றம்!

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் முதல் அமர்வில் மேலும் நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ளது.

 

 

 

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 434 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், பதிலளித்த இலங்கை அணி 446 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 12 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

 

 

 

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி, நான்காம் நாள் ஆட்ட முடிவில் 21.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அப்போது மொத்தமாக 45 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

 

 

 

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி மேலும் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. பாபர் அசாம் 34 ஓட்டங்களையும், மொஹமட் தாஹா 24 ஓட்டங்களையும் பெற்றனர். சல்மான் ஆகா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

 

 

 

முன்னதாக, நான்காம் நாள் ஆட்டத்தில் தொடக்க வீரர் தையாப் ஆரிப் 11 ஓட்டங்களுடன் அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

 

 

 

அசான் அவைஸ் மற்றும் மொஹமட் தாஹா ஆகியோர் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினர்.

 

 

 

எனினும், போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இலங்கை முதலாம் இன்னிங்ஸில் 446 ஓட்டங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை தமது முதலாம் இனிங்ஸில் 446 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.     போட்டியில் நேற்றைய மூன்றாம் நாள்...

தனஞ்சய டி சில்வாவின் 14 ஆவது டெஸ்ட் சதம்

ராவல்பிண்டியில் நடைபெறும் இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தைப்...