புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவர்களினால் 12.02.2024 அன்று அவரது அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய ஹஜ் குழுவின் தலைவராக இப்றாஹீம அன்சார் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
புதிய ஹஜ் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முஸ்லிம் சமய விவகார பணிப்பாளர் Z.A.M பைஸல், மில்பர் கபூர், இஃபாஸ் நப்ஹாஸ், முஹம்மத் ஹனீபா இஸ்ஹாக், நிப்ராஸ் நஸீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட அன்சார் இலங்கைக்கான சவூதி அரேபியா, ஓமன், மலேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் தூதுவராக பணியாற்றிய தொழில் இராஜதந்திரி ஆவார்.
