Date:

லிந்துலை ஆற்றிலிருந்து சடலம் மீட்பு !

 

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேணை தபால் அலுவலகத்தின் பின் பகுதியில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றில் இனம் தெரியாத பெண்ணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பஸ்ஸில் பயணித்த பயணிகள் குறித்த ஆற்றில் சடலமொன்று கிடப்பதை அவதானித்து இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

 

அத்துடன் பிரதேச மக்களுக்கும் இவ்விடயம் தெரிய வந்துள்ளது. இருப்பினும் சடலமாக தண்ணீரில் கிடக்கும் பெண் தொடர்பில் தகவல் இதுவரையும் அடையாளம் காணப்படவில்லையென விசாரணைகளை ஆரம்பித்துள்ள லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கும் இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து சடலத்தை பார்வையிட்டதன் பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

NewsTamil Ad
NewsTamil Ad

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கைக்கு விசா இல்லாத நுழையக்கூடிய நாடுகள்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம்....

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின்...

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு...