மிரிஹானை ஜுபிலி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அயலவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்களை மீட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
80 வயதுடைய ஆண் ஒருவரும், 96 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்த நிலையில், அவர்கள் இருவரும் தம்பதிகள் என குறிப்பிடப்படுகின்றது.
