பாகிஸ்தானில் நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தற்போது வந்துள்ள தகவலின்படி இம்ரான் கான் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும் எனவே அக்கட்சி பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்த நிலையில் இம்ரான்கானின் கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இம்ரான் கான் காட்சி மற்றும் அவரது ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 154 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதாக தெரியவருகிறது.
மேலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் நவாப் கட்சிகள் தலா 47 இடங்களில் முன்னிலை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு சில வழக்குகளில் சிக்கி தற்போது சிறையில் இருக்கும் இம்ரான் கான் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் பிரதமர் ஆவாரா அல்லது அவரது ஆதரவாளர்கள் யாராவது பிரதமர் ஆவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
