கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கி கடும் வாகன நெரிசல்

தற்போது நிலவும் கடும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து, கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதன்படி, மருதானை, சங்கராஜ மாவத்தை மற்றும் கெத்தாராம உள்ளிட்ட பகுதிகளின் பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும், ஆமர் வீதி, நவம் மாவத்தை மற்றும் பொரளை உள்ளிட்ட பகுதிகளின் பல வீதிகளிலும் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இதனால், குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

ஹட்டன் நகரில் மீண்டும் கனமழை

ஹட்டன் நகரில் மீண்டும் கனமழை : நகர மத்தியில் வெள்ளநீர் பெருக்கெடுப்பு! ஹட்டன் நகரில் இன்று (11) பிற்பகல் 2 மணிமுதல் மீண்டும் பெய்த...

100mmஇற்கும் அதிக மழைவீழ்ச்சி

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100mmஇற்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் #WeatherUpdate #WeatherAlert...