ஹட்டன் நகரில் மீண்டும் கனமழை

ஹட்டன் நகரில் மீண்டும் கனமழை : நகர மத்தியில் வெள்ளநீர் பெருக்கெடுப்பு!

ஹட்டன் நகரில் இன்று (11) பிற்பகல் 2 மணிமுதல் மீண்டும் பெய்த கடும் மழை காரணமாக, பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நகருக்கு வருகை தந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

நகரில் பெய்த மழைநீர் பிரதான வீதியூடாக வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியதால், எம்.ஆர். நகரம் மற்றும் ஹட்டன் மல்லியப்பு பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டது.

இதேவேளை, ஹட்டன் நகரில் மழைநீர் முறையாக வழிந்தோடுவதற்காக, நீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை ஹட்டன் – டிக்கோயா நகர சபை தற்போது முன்னெடுத்து வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கி கடும் வாகன...

தற்போது நிலவும் கடும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து, கொழும்பு நகரின் பல பகுதிகளில் வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதன்படி,...

100mmஇற்கும் அதிக மழைவீழ்ச்சி

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 100mmஇற்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் #WeatherUpdate #WeatherAlert...