இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது சிறையில் உள்ள இம்ரானுக்கு அரசு இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நேற்று (30) 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இம்ரான் 2022 இல் பிரதமர் பதவியில் இருந்து அவரது எதிரிகளால் வெளியேற்றப்பட்டார் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
ஆனால் இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என்று இம்ரான் கான் தெரிவித்து வருகின்றார்.

                                    




