தான் தங்க மாலைகளை திருடியதாக பொலிஸ் புத்தகத்தில் முறைப்பாடு காட்டப்பட்டால் நாளை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி விடைபெறுவேன் என ரோஹித அபேகுணவர்தன இன்று நாடாளுன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒவ்வொருவரையும் சிறுவயதில் அழைக்க ஒவ்வொரு பெயர் வைத்திருப்பதாக கூறிய ரோஹித அபேகுணவர்தன, தன்னையும் அன்பாக தங்கமே (ரத்தரனே) என தனது குடும்பத்தினர் தம்மை அழைத்ததாகவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மேலும் தான் பெண்களின் தங்க மாலைகளை பறித்து செல்வதை கண்ட யாரேனும் ஒருவர் இருப்பாராயின் முன்வருமாறு தான் சவால் விடுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டியிருந்தார்.
இணையவழி சட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.









