சீனி வரி மோசடிக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று (23) கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தொடர்நது கருத்து தெரிவிக்கையில்,
“2020 ஆம் ஆண்டு 1 கிலோ சீனிக்கு விதிக்கப்பட்ட விசேட பண்ட வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதமாக அரசாங்கம் குறைத்ததன் காரணமாக,நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில்,அரசாங்கத்திற்கு ரூ.16707 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக 23.3.2022 அன்று வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கோபா குழுவிற்கு அறிக்கையை அனுப்பிய பிறகு, வருமானம் பெறாததற்கு பொறுப்பான தரப்பினரை அடையாளம் காண 21 ஜூன் 2022 அன்று சி.ஐ.டி.க்கு அனுப்பி வைக்கப்பட்டு 19 மாதங்கள் கடந்து விட்டன. இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் யார் என கேள்வி எழுப்புகிறேன்” என்றார்.









