காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து எதிர்வுகூறல் – இலங்கைக்கு என்ன பாதிப்பு?

தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும் அதைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் தாக்கம் எதிர்வரும் 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் நாட்டில் உணரப்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்

 

இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

இருப்பினும், இது தொடர்பான துல்லியமான முன்னறிவிப்புகளை வழங்குவதற்குப் போதுமான தரவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும், இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவசியமான பட்சத்தில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து, கிழக்குக் கடற்கரையை அண்மித்து வடக்கு நோக்கி நகருமானால், அதன் தாக்கம் நாட்டில் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் அஜித் விஜேமான்ன வலியுறுத்தினார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

நிஷாந்த ரணதுங்க கைது!

​தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணசிங்க, இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரம்பேவ பேருந்து விபத்து – பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்...