Date:

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பு!

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விடயம் குறித்து  லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச்.வேகப்பிடி தெரிவிக்கையில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு என்பனவற்றின் காரணமாக நாட்டில் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை வணிக வங்கிகளினால் எரிவாயுயை பெற்றுக் கொள்வதற்கான கடன் கடிதங்கள் வழங்கப்படாமையினாலே தற்போது எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்...

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...

நாணயச் சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஓமான்...