Date:

நாட்டில் எண்ணற்ற பிரச்சினைகள் நிலவும் போது ஜனாதிபதி ஹூதிகளை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பணத்தை செலவிடுகிறார் – சஜித்

நாட்டில் எண்ணற்ற பிரச்சினைகள் நிலவும் போது ஜனாதிபதி ஹூதிகளை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பணத்தை செலவிடுகிறார். என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு தினசரி உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில்,இளைஞர்கள் மற்றும் நுண்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர் துயரத்தில் இருக்கும் நேரத்தில்,220 இலட்சம் பேரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,

பாரிய அளவில் வேலையின்மையை தலைவிரித்தாடும் வேளையில்,
நாட்டின் பணத்தில் இருந்து 250 மில்லியன் ரூபா செலவளித்து கடற்படையின் கடற்படை கப்பலை ஹூதி கிளர்ச்சிக் குழுவினரை ஒடுக்குவதற்காக அனுப்ப அரசாங்கம் தீர்மானித்தது என்பது பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் அத்தியாவசிய உள்ளக நடவடிக்கைகளுக்காக இருக்கும் பணம் ஹூதி கிளர்ச்சி குழுவினரை ஒடுக்குவதற்கு அனுப்பப்படும் வகையில்,நாட்டின் கடனில் இருந்து குறைந்தது 25 பில்லியனையாவது குறைப்பதாக வெளிநாடுகள் உறுதியளித்துள்ளனவா என்பதை தாம் அறிய விரும்புவதாகவும்,இதனால் என்ன பலன் என்று கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் இந்நாட்டு மக்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ளாது,சிறு குழந்தை முதல் கர்ப்பிணி தாய்மார்கள்,பாடசாலை மாணவர்கள்,இளைஞர்கள் வரை சகரும் மிகவும் நிர்க்கதி நிலையில் உள்ளனர் என்றும்,
இந்தப் பணம் நாட்டின் அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏன் செலவிடப்படவில்லை என கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அமெரிக்கா,இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் இருக்கும் போது ராஜபக்சவின் புத்திரர் ரொக்கட்களை ஏவி வங்குரோத்தடையச் செய்த இந்நாட்டில்,இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது மேலும் நாட்டை வங்குரோத்தடையச் செய்வதற்காகவா என்பது பிரச்சினைக்குரிய விடயம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...