Date:

மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக தீர்மானம்

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த இந்திரஜித் குமார சுவாமி தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2019 டிசம்பர் 24ஆம் திகதி, பேராசிரியர் டப்ளியூ. டி. லக்ஷமன் இலங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவி ஐக்கிய இராச்சியத்தில் சாதனை!

இலங்கை - மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர்...

மைத்திரி வழங்கிய இரகசிய வாக்குமூலம் வெளியானது

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய...

புதிய விசா நடைமுறை அறிமுகம்

ஈ - விசா பெற்றுக் கொள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் ...

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த...