Date:

பிரதமர் – புனித பாப்பரசர் சந்திப்பு இல்லை

இத்தாலிக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ,அங்கு வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கமாட்டாரென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக ,பிரதமர் மஹிந்த அங்கு பாப்பரசரை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தபின்னர் , கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட்டோர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர். உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடக்காமல் சர்வதேசத்திற்கு அரசு தவறான விடயங்களை கூறலாமென பேராயர் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்த பின்னணியிலேயே பாப்பரசர் – மஹிந்த சந்திப்பு இடம்பெறாதென அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொழும்பு பேராயர் இல்லத்திலிருந்து வத்திக்கானுக்கு வழங்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டிருக்கக் கூடுமென்று மற்றுமொரு தகவல் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (உ/த) அதிக தரங்களுடன் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப்...

”என்னைக் கேலி செய்தவர்கள் இப்போது கேலிப் பொருளாகி விட்டனர்”

"ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி நான் பேசியபோது, ​​நான் கேலி செய்யப்பட்டேன்....

யோஷித-டெய்சி ஆச்சி மீது வழக்குப் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்கும் மேஸ்ட்ரோ கேட்வே கேம்பஸ்…

60க்கும் மேற்பட்ட டிப்ளமோ பட்டங்களை வழங்கிய "மேஸ்ட்ரோ கேட்வே கேம்பஸின் பட்டமளிப்பு...