எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய மின்சார சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அமைச்சர் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய மின்சாரச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே, எதிர்வரும் 12 ஆம் அல்லது 13 ஆம் திகதிகளில் உரிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.