Date:

வெளிநாட்டு சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்

வெளிநாட்டு சேவைக்கு போதியளவு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவர், 55 நாடுகள் மற்றும்  இந்த நாட்டின் 24 துறைகளில் 164 அதிகாரிகள் மாத்திரமே பணியாற்றுவதாக தெரிவித்தார்.

இலங்கைக்கு மிக முக்கியமான நாடான இந்தியாவில் 6 பேர் மாத்திரமே பணிபுரிவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தேவையான பணியாளர்களின் எண்ணிக்கை 264 எனவும் தெரியவந்துள்ளது.

தேவையான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டே வெளிநாட்டு சேவைக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...