பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், உலக சமாதானத்தை வலியுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பாலஸ்தீன சார்பு சால்வை அணிந்து சபை அமர்வில் இன்று பங்கேற்றார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், வெளிவிவகார அமைச்சுக்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் ஆரம்பமானது.
இவ்விவாதத்தில் பாலஸ்தீன சால்வை அணிந்தே சஜித் உரையாற்றினார்