Date:

தனது இரட்டை குழந்தைகளை 25,000 ரூபாவுக்கு விற்ற இளம் தாய்..!

பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த இரட்டை குழந்தைகளை தலா 25,000 ரூபாவுக்கு இருவருக்கு விற்றுள்ளார்.

இந் நிலையில் குழந்தைகளை வாங்கிய இரண்டு பெண்களும் இன்று  காலை கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரட்டைக் குழந்தைகளின் இளம் தாய் மற்றும் ஒரு குழந்தையை வாங்கிய பெண், ராகம பிரதேசத்திலும் மற்றைய குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் களனி பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்த குறித்த தாய் கொழும்பு காசல் மகப்பேறு வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு...

காய்கறிகளின் மொத்த விலை குறைந்தது

தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் அதிக அளவு காய்கறிகள் கையிருப்பில் உள்ளதாலும்,...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல்...

சுங்கம் தடுத்துள்ள வாகனங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பு

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...